மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 326 பேருக்கு கொரோனா + "||" + Corona to 326 people in the last 24 hours in Pudhucherry

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 326 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 326 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் தற்போது 4,333 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 280 பேருக்கும், காரைக்காலில் 30 பேருக்கும், ஏனாமில் 10 பேருக்கும், மாஹேவில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,13,948 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,710 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 480 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், புதுச்சேரியில் மொத்தம் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,905 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 4,333 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மேலும் 1,674 பேருக்கு கொரோனா; 1,376 பேர் டிஸ்சார்ஜ்
கர்நாடகாவில் தற்போது 24,280 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. புதுவையில் இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை: அமைச்சர் நமச்சிவாயம்
புதுவையில் இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
4. கர்நாடகாவில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கர்நாடகாவில் தற்போது 24,144 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் தற்போது 20,524 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.