புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் ஜூலை 1-ந் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் ஜூலை 1-ந் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் தனியார் நிறுவனங்கள் வழங்கிய கொரோனா நிவாரண பொருட்களை புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா 3வது அலை பரவுவதற்கு முன்னர் புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவரும் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா 3வது அலை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளும் விதமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் வரும் 21 ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுவதாக குறிப்பிட்ட அவர், கொரோனா நோயாளிகளுக்கு யோகா சிறந்த மருந்தாக உள்ளது என்றும் யோகாவை கற்றுக்கொண்டால் எந்த அலை வந்தாலும் சமாளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story