சென்னை மாநகராட்சிக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய தன்னார்வ அமைப்பு


சென்னை மாநகராட்சிக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய தன்னார்வ அமைப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 9:51 AM GMT (Updated: 22 Jun 2021 9:51 AM GMT)

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் முயற்சியால் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சிக்கு வழங்கி வருகிறது.

அந்தவகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் வாழும் கலை அமைப்பின் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், டிஜிட்டல் ரத்த அழுத்த உபகரணங்கள், குளுக்கோ மீட்டர்கள், குளுக்கோ மீட்டர் கீற்றுகள் மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம் ரிப்பன் மாளிகையில் நேற்று வழங்கப்பட்டது.

தன்னார்வ அமைப்பின் சார்பில் 10 லிட்டர் அளவிலான 12 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 5 லிட்டர் அளவிலான 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 250 டிஜிட்டல் ரத்த அழுத்த உபகரணங்கள், 250 குளுக்கோமீட்டர்கள், 25 ஆயிரம் லான்செட்டுகள், 25 ஆயிரம் குளுக்கோமீட்டர் கீற்றுகள், 10 கிலோ அரிசி மற்றும் 14 அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய 500 பைகள் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், டாக்டர் நர்னாவாரே மனிஷ் சங்கர்ராவ், விஷூ மகாஜன், டி.சினேகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story