உத்திரமேரூரில் விடுதியில் விபசாரம்; 3 பேர் கைது


உத்திரமேரூரில் விடுதியில் விபசாரம்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2021 7:23 AM IST (Updated: 23 Jun 2021 7:23 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூரில் விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்திரமேரூர், 

உத்திரமேரூரில் தனியார் விடுதியில் விபசாரம் நடப்பதாக போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் தனியார் விடுதிக்கு திடீரென சென்று சோதனை செய்தனர். அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாக வீரராகவன் (வயது 47), கார்த்திக் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விடுதி மேலாளர் சபாபதி (74) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

37 மற்றும் 36 வயதான 2 பெண்களை பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story