கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத மண்டப உரிமையாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்


கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத மண்டப உரிமையாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 25 Jun 2021 11:12 AM IST (Updated: 25 Jun 2021 11:12 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத மண்டப உரிமையாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த திருமண மண்டபங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் ஓட்டல்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, மாநகராட்சி வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மேற்கொண்ட களஆய்வில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 6 திருமண மண்டபங்களுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தது.

அதன்தொடர்ச்சியாக நேற்று ராயபுரம் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மேற்கொண்ட களஆய்வில் எழும்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முககவசம் அணியாமலும் சமூகஇடைவெளியை பின்பற்றாமலும் இருந்தனர். இதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் மண்டப உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

Next Story