மேலும் 48 பேருக்கு கொரோனா


மேலும் 48 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Jun 2021 9:30 PM IST (Updated: 25 Jun 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 6 பெண்கள் உள்பட மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

இதன்மூலம் கடந்த 2 மாதங்களுக்கு பின்னர் ஒருநாள் பாதிப்பு 50-க்கு கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்து 615 ஆனது. 


மேலும் 82 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அந்த வகையில் இதுவரை 30 ஆயிரத்து 624 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Next Story