படப்பை அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


படப்பை அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Jun 2021 7:29 AM IST (Updated: 28 Jun 2021 7:29 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் டி.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 47), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டிக்கொண்டு சென்னை வேளச்சேரி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஆதனூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து தனக்கு பணம் தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அவருடைய தாயார், பின்னர் பணம் தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஆட்டோவில் நான் படுத்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு குருமூர்த்தி வெளியே வந்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை உறவினர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்கும் போது வீட்டின் பின்புறம் உள்ள சிலாப்பில் கயிறு மூலம் தூக்குப்போட்டு குருமூர்த்தி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் குருமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story