காஞ்சீபுரம், சித்தாமூரில் இன்று மின்தடை


காஞ்சீபுரம், சித்தாமூரில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 28 Jun 2021 8:18 AM IST (Updated: 28 Jun 2021 8:18 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் ஓரிக்கை துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) பராமரிப்புபணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் நகரின் சில பகுதிகளான டி.கே. நம்பித்தெரு, மிலிட்டெரி ரோடு, சின்ன அய்யங்குளம், ஆசிரியர் நகர், வேலிங்கப்பட்டரை, அரசு நகர், காமராஜர்வீதி, காந்திரோடு, எம்.எம். அவென்யு, பள்ள காலனி, காமாட்சி அம்மன் காலனி, காலனி தோட்டம், வேகவதி நதி ரோடு, திருவள்ளூர் வீதி, நாகலத்து தெரு, தும்பவனம் தெரு, விளக்கடி கோவில் தெரு, பவாப்பேட்டை, கோட்ரம்பாளையம், விளக்கடி தோப்பு, நாராயணபாளையம் தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சீபுரம், ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, பாலாறு தலைமை நீரேற்றம் மற்றும் ஓரிக்கை துணை மின் நிலையத்தை சேர்ந்த கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் தடை ஏற்படும். இந்த தகவலை காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற் பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம், செய்யூர், மூசிவாக்கம் துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட அரையப்பாக்கம், தோட்ட நாவல், புதூர், கினார், கே.கே.புதூர், வளர்பிறை அட்டவட்டம், முன்னுத்திகுப்பம், ஓதியூர், முட்டுக்காடு, தளுதாழிக்குப்பம், பனையூர், முதலியார் குப்பம், நைனார் குப்பம், வேடவாக்கம், கிளியாநகர், பாதிரி, கீழரமூர், ஓரத்தூர், ஆலப்பாக்கம், பசுவங்கரணை, ஒட்டக்கோவில், அத்திமனம், ஜானகிபுரம் உள்பட்ட கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மதுராந்தகம் செயற் பொறியாளர் கிருபானந்தன் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் வட்டம் மற்றும் செய்யூர் வட்டம் ஓரத்தி, பொலம்பாக்கம், நுகும்பல் 33/11 கிவோ துணைமின் நிலையங்களில் இன்று சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த மின்நிலையங்களுக்குட்பட்ட ஓரத்தி, கீழ்அத்திவாக்கம், பாபுராயன்பேட்டை, கொங்கரைமாம்பட்டு, சித்தாமூர், தொன்னாடு, கொளத்தூர் நுகும்பல், பூங்குணம், விளங்காடு, போந்தூர், கொளத்த நல்லூர் உட்பட்ட கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று அச்சரப்பாக்கம் மின் செயற்பொறியாளர் கிறிஸ்டோபர் லியோ ராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story