சாலையில் தவறவிட்ட ரூ.1½ லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர் போலீசார் பாராட்டு
சாலையில் தவறவிட்ட ரூ.1½ லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர் போலீசார் பாராட்டு.
பொறையாறு,
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினிசெல்வம். இவரது மனைவி சற்குணா. இவர்கள் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் திருமணத்திற்கு நகைகள் வாங்குவதற்காக காரைக்காலுக்கு சென்றார். அப்போது அவர்கள் ஒரு கைப்பையில் ரூ.90 ஆயிரம் மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி நகைகளை எடுத்து சென்றுள்ளனர். இந்தநிலையில் திடீரென சற்குணா கையில் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை காணவில்லை. இதனால் சற்குணா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கணவன்- மனைவி இருவரும் சாலை முழுவதும் தேடியும் கைப்பை கிடைக்கவில்லை. இதுகுறித்து கணவன்-மனைவி இருவரும் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் ரஜினிசெல்வம்-சற்குணா ஆகியோர் தவறவிட்ட கைப்பையை மீட்டு தரங்கம்பாடியை சேர்ந்த தன்னார்வ இளைஞர் கிரிஸ்டன் என்பவர் பொறையாறு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார். பின்னர் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்- இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாச்சலம், முருகவேல், கண்ணன் ஆகியோர் முன்னிலையில் ரஜினிசெல்வம்-சற்குணா ஆகியோரிடம் ரூ.1½ லட்சம் மதிப்பிலான கைப்பையை கிரிஸ்டன் ஒப்படைத்தார். அப்போது இளைஞர் கிரிஸ்டனுக்கு தம்பதியினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேலும் இளைஞரின் செயலை பொறையாறு போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.

Related Tags :
Next Story