மாநில அரசுக்கு 90 சதவீதம் தடுப்பூசி வினியோகம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்


மாநில அரசுக்கு 90 சதவீதம் தடுப்பூசி வினியோகம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 30 Jun 2021 5:26 PM IST (Updated: 30 Jun 2021 5:26 PM IST)
t-max-icont-min-icon

மாநில அரசுக்கு 90 சதவீதம் தடுப்பூசி வினியோகம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் கி.வீரமணி வலியுறுத்தல்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இதுவரை 1.43 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது பல இடங்களில் தடுப்பூசி கைவசம் இல்லை என்ற நிலை உள்ளது.

இந்தநிலையில், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு 25 சதவீத அளவு தடுப்பூசிகள் வழங்குவதை 10 சதவீதமாக குறைத்து, அரசுக்கு 90 சதவீதம் என்ற அளவீட்டில் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு பயணிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த தடையை போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டதற்கு தேச விரோதம் என்று பலர் கூச்சலிட்டனர். புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழாவில் புதுச்சேரி துணை நிலை கவர்னர், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தானே தெரிவித்தார். பா.ஜ.க. அமைச்சர்களும் ஒன்றிய அரசு என கூறி தானே, பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அப்படியென்றால் இவர்களும் தேச விரோதிகள் தானா?. பா.ஜ.க. அமைச்சர்கள் சொன்னால் தேச பக்தி. திராவிட முதல்-அமைச்சர் சொன்னால் மட்டும், தேச விரோதமா?.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story