என்ஜின் படகு விசிறியில் சிக்கி மீனவர் பலி
என்ஜின் படகு விசிறியில் சிக்கி மீனவர் பலி.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி அயோத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற சுதேசி (வயது 27). மீனவரான இவர் நேற்று காலை மெரினா கடலில் சக மீனவர்களுடன் மீன் பிடித்து விட்டு என்ஜின் படகில் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
குடிசை மாற்று வாரியக்குடியிருப்பு பகுதி அருகே வந்தபோது, சுதேசி படகில் இருந்து கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் என்ஜினில் உள்ள விசிறியில் சிக்கியது. உடனே ரத்த வெள்ளத்தில் அலறியபடியே நிலைத்தடுமாறி கடலில் சுதேசி விழுந்து உயிருக்கு போராடினார். அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்த சக மீனவர்கள், ஆட்டோவில் ஏற்றி சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவரை அழைத்து சென்றனர்.
அவருக்கு ரத்த போக்கு அதிகமானதால், டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுதேசி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story