மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதான வீரேந்தருக்கு 4 நாள் போலீஸ் காவல் + "||" + ATM 4 days police custody for hero arrested in robbery case

ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதான வீரேந்தருக்கு 4 நாள் போலீஸ் காவல்

ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதான வீரேந்தருக்கு 4 நாள் போலீஸ் காவல்
ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதான வீரேந்தருக்கு 4 நாள் போலீஸ் காவல் சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி.
ஆலந்தூர்,

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்காமல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இவ்வாறு 30-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் ரூ.1 கோடிக்கு மேல் கொள்ளை போனது. சென்னையில் மட்டும் ரூ.50 லட்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்டது.


இதுகுறித்து தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அமீர் அர்ஷ், வீரேந்தர் ராவத், நஜிம் உசேன் ஆகிய 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கைதான வீரேந்தர் ராவத்தை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கோரி சைதாப்பேட்டை பெருநகர 18-வது நீதிமன்றத்தில் தரமணி போலீஸ் சார்பில் அரசு தரப்பு வக்கீல் எட்வர்ட் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுப்பிரமணியன், கொள்ளையன் வீரேந்தர் ராவத்தை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை
திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை 32 பெண்களை ஏமாற்றியதாக திடுக்கிடும் வாக்குமூலம்.
2. திரிபுராவில் பா.ஜ.க-கம்யூனிஸ்டு மோதல் முற்றுகிறது அடிதடியில் 50 பேர் காயம்; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு
திரிபுராவில் பா.ஜ.க-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே மோதல் முற்றி உள்ளது. 2 நாட்களில் அடிதடியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர். பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.
3. செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர்: சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு
செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் கோர்ட்டு காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
4. கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. சைக்கிளில் நேற்று ஈரோடு வந்த ரிசர்வ் போலீஸ் படையினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
5. தமிழக போலீசாரின் கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு
தமிழக போலீசாரின் வரலாற்று பெருமை, கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.