அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியை காப்பாற்றுங்கள் மோடிக்கு வைகோ கடிதம்


அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியை காப்பாற்றுங்கள் மோடிக்கு வைகோ கடிதம்
x
தினத்தந்தி 1 July 2021 7:52 PM IST (Updated: 1 July 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியை காப்பாற்றுங்கள் மோடிக்கு வைகோ கடிதம்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த, 23 மாத பெண் குழந்தை மித்ரா அரிய வகை மரபு அணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே, நடக்க முடியாது. இதற்கான ஒரே மருந்து சோல்ஜென்ஸ்மா. அதன் விலை ரூ.16 கோடி ரூபாய் ஆகும். அதற்கு மேல், இந்திய அரசின் வரிகள் தனி. அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்.

குழந்தையின் தந்தை சதீஷ், சிறுதொழில் செய்து வருகின்றார். இவ்வளவு பெரிய தொகையை, அவரால் திரட்ட இயலாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, இதே நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற, மீரட்டைச் சேர்ந்த இஷானி என்ற பெண் குழந்தைக்கு, சுவிட்சர்லாந்து நாட்டின் நோவார்டிஸ் மருந்து நிறுவனம், இந்த மருந்தை, இலவசமாக தருவதாக அறிவித்து இருக்கின்றது. அந்த குழந்தை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவம் நடைபெற்று வருகின்றது.

எனவே, அதே நோவார்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, மருந்தை, தமிழ்நாட்டு குழந்தை மித்ராவுக்கும் பெற்றுத்தந்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுமாறு, தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story