காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்


காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 July 2021 2:19 PM GMT (Updated: 2 July 2021 2:19 PM GMT)

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.

சென்னை,

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நீர் நிர்வாகம் குறித்த ஆலோசனை வழங்க காவிரி கண்காணிப்பு குழு என்ற துணை அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இதுவரை 3 ஆண்டுகள் ஆகியும் அதற்கு நிரந்தர தலைவர் இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது.

எனவே காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். நியாயமான கோரிக்கைகளை கர்நாடக அரசு ஏற்காத பட்சத்தில், தமிழகம் வழியே கடலில் சென்று கலக்கும் காவிரி உபரி நீரை தடுத்து மேகதாதுவுக்கு கீழ் உள்ள தமிழக எல்லையான ராசிமணலில் தமிழக அரசு அணை கட்டி மேட்டூர் அணை மூலம் பாசனத்துக்கு பயன்படுத்திக்கொள்ள ஆணையத்திடம் அனுமதி கேட்டுப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ‘காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பட வைப்போம்... மேகதாது அணை கட்டுமானத்தை நிறுத்தி வைப்போம் எனும் தலைப்பில் பிரசுரங்களை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.சுந்தர்ராஜன் வெளியிட்டார்.

Next Story