டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் சிக்கினர்
டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் சிக்கினர்
மதுரை
மதுரை சக்கிமங்கலம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மகன் முத்துசாலை (வயது 30). தனியார் மருத்துவமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், முத்து சாலையை அவரது சகோதரர் திருமுத்து செல்வம்(45), சிவகங்கை மாவட்டம் டி.புதூரை சேர்ந்த அழகுபாண்டி (26), நாட்டாக்குடியை சேர்ந்த சமயதுரை(19) ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். குடும்பத் தகராறு காரணமாக முத்துசாலை கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story