மதுரையில் இருந்து பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு ரெயில் சேவை
மதுரையில் இருந்து பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு 11ந் தேதி முதல் இயக்கப்படுகிறது
மதுரை, ஜூலை
மதுரையில் இருந்து சென்னை வழியாக பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கால் இந்த ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, வருகிற 11-ந் தேதி முதல் மதுரையில் இருந்து சண்டிகருக்கு மீண்டும் ரெயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் (வ.எண்.02687) ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமைகளில் அதிகாலை 3.50 மணிக்கு சண்டிகர் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், சண்டிகரில் இருந்து வருகிற 16-ந் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் மதுரைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.02688) சண்டிகரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.55 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
இந்த ரெயிலில், 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் 3, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் 9, இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் 4, சரக்கு மற்றும் கார்டு பெட்டியுடன் கூடிய இருக்கை வசதி பெட்டிகள் 2 இணைக்கப்பட்டிருக்கும்.
Related Tags :
Next Story