பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 6 July 2021 1:03 AM IST (Updated: 6 July 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிக்கப்பட்டது.

மதுரை,ஜூலை
மதுரை புதூர் ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகலா (வயது 48). சம்பவத்தன்று மாலை இவர் அவரது வீட்டு பகுதியில் நடைபயிற்சி சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று சந்திரகலா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story