கொரோனாவால் 65 பேர் பாதிப்பு
கொரோனாவால் 65 பேர் பாதிப்பு
மதுரை
மதுரையில் மாவட்டத்தில் நேற்று 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 47 பேர் நகர் பகுதியையும் மற்றவர்கள் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். அதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 746 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 91 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீட்டிற்கு திரும்பினர். இதில் 68 பேர் நகர் பகுதியையும், மற்றவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை சேர்த்து மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
அதன்படி நேற்று மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 613 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் மதுரையில் நேற்று 4 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்தனர். அதில் இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1129 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story