சோலைமலை முருகன் கோவிலில் கார்த்திகை பூஜை

சோலைமலை முருகன் கோவிலில் கார்த்திகை பூஜை
அழகர்கோவில்
முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலாகும். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று ஆனி மாத கார்த்திகை பூஜைகள் நடந்தது. இதில் அங்குள்ள சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர் விபூதி, சந்தனம் தேன், புஷ்பம், உள்ளிட்ட 16 வகையான, அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து தாமரை பூக்கள் மாலை அலங்காரத்தில் சாமி காட்சி தந்தார். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதத்திற்கு பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். முருகப் பெருமானுக்கு உகந்த நாள் இந்த ஆனிமாத கார்த்திகையாகும். முன்னதாக அங்குள்ள வித்தக விநாயகர், மூலவர் சுவாமி, மற்றும் ஆதிவேல் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்குகள் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story