பிரதோஷ விழா


பிரதோஷ விழா
x
தினத்தந்தி 7 July 2021 11:54 PM IST (Updated: 7 July 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

சிவன் ே்காவில்களில் ஆனி பிரதோஷ விழா

திருப்பரங்குன்றம்,
சிவன் ே்காவில்களில் ஆனி பிரதோஷ விழாவில் 16 வகையான அபிஷேகம் நடந்தது.
பிரதோஷ விழா
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுவை கண்ட சிவ பெருமான் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டிபால் சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதற்கிடையே சுவாமிக்கு நெல், கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சோழவந்தான் வைகை ஆற்று கரையில் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள பிரளயநாத கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 12 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 
ஏடகநாதர் சுவாமி கோவில்
திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். இதேபோல் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவளவயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி ஈஸ்வரமுடையார் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது. பூஜைக்கு பின்னர் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story