வடகரை கண்மாயில் தண்ணீர் திறப்பு


வடகரை கண்மாயில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 7 July 2021 11:54 PM IST (Updated: 7 July 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் வடகரை கண்மாயில் ஒரு போகம் மற்றும் இருபோக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சோழவந்தான்
சோழவந்தான் வடகரை கண்மாயில் ஒரு போகம் மற்றும் இருபோக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
விவசாய பணிகள்
சோழவந்தான் வடகரை கண்மாயில் சமீபத்தில் பெய்த மழையில் கண்மாய் நிரம்பி அவசர வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவந்தான் உட்பட இப்பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாய பணிகள் நடந்து வருகிறது. இதற்கான பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் பொதுப்பணித்துறை வடகரை கண்மாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்திருந்தனர். 
நேற்று காலை வடகரை கண்மாயில் கரையில் உள்ள கன்னிமார் கோவிலில் பாரம்பரிய வழக்கப்படி பூஜைகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட வெங்கடேசன் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் செல்லையா, பெரியார் பாசன நீரை பயன்படுத்துவோர் சங்கதலைவர் அண்ணாதுரை மற்றும் விவசாயிகள் முன்னிலையில் பூஜைகள் நடந்தது. 
திறப்பு
பின்னர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கண்மாயில் உள்ள முதல் மடை திறந்து விட்டார். கண்மாயில் இருந்து மடை வழியாக பாசனத்திற்கு தண்ணீர் வருவதைக் கண்ட விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். 
இதில் வருவாய் ஆய்வாளர் ராஜன், பேரூராட்சி செயல்அலுவலர் ஜீலான்பானு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, பேரூராட்சி துறைப் பணியாளர்கள் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story