செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது குழந்தை பலி


செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 8 July 2021 12:07 AM IST (Updated: 8 July 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே விளையாடி கொண்டிருந்தபோது செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது

நாகமலைபுதுக்கோட்டை
மதுரை அருகே விளையாடி கொண்டிருந்தபோது செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
3 வயது குழந்தை
மதுரை அருகே நாகமலைபுதுக்கோட்டை அடுத்துள்ள கீழக்குயில்குடியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வினிதா. இவர்களது 3 வயது குழந்தை ஜானு. இவள் நேற்று மாலை 5.30 மணியளவில் வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். 
அப்போது ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மூடி உடைந்த நிலையில் இருந்த செப்டிக் டேங்கில் குழந்தை தவறி விழுந்தது. அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜானு இறந்தது. 
சோகம்
இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
3 வயது குழந்தை செப்டிக் டேங்க் குழியில் விழுந்து உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story