கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 July 2021 12:08 AM IST (Updated: 8 July 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 3 பேர் கைது

மதுரை
மதுரையில் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சம்பவத்தன்று கரிமேடு போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மேலபொன்னகரம் 2-வது தெருவில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த சாய்குமார்(வயது 18), நாகராஜ்(24), பாண்டி(20) என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1¼ கிலோ கஞ்சா, 800 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
1 More update

Next Story