நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து


நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து
x
தினத்தந்தி 7 July 2021 8:21 PM GMT (Updated: 7 July 2021 8:24 PM GMT)

நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், கொரோனா நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், கொரோனா நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தீ விபத்து
நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் கூடுதல் மருத்துவ கட்டிடத்தில் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு, கொரோனா நோயாளிகள் பிரிவு என தனித்தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் பின்பகுதியில் பழைய மருத்துவ அட்டைப்பெட்டிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த அட்டை பெட்டியில் நேற்று இரவு திடீரென தீ பற்றி எரிந்தது. தீயில் இருந்து கிளம்பிய புகை மண்டலமாக காட்சி அளித்தது.
நோயாளிகள் இடமாற்றம்
உடனே மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வார்டில் கொரோனா நோயாளிகள் 14 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள்  2 வாகனங்களில் விரைந்து சென்று தீயை முற்றிலுமாக அணைத்தனர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கலெக்டர் பார்வையிட்டார்
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் அரவிந்த் விரைந்து சென்று தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார். மேலும் ஆஸ்பத்திரி டீன் திருவாசகமணி, ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ் மற்றும் டாக்டர்களிடம் விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். 
அப்போது நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர். இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் நேற்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story