தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே தொழிற்சங்கங்கள் மதுரை ரெயில் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மதுரை, ஜூலை
நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே தொழிற்சங்கங்கள் மதுரை ரெயில் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
ரெயில்வே துறை
ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை ரெயில் நிலையத்தின் மேற்குநுழைவுவாயில் முன்பு தொழிற்சங்கங்கள் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் உதவி கோட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஜெயராஜ் சேகர், துணை பொதுசெயலாளர் திருமலை அய்யப்பன், கோட்ட செயலாளர் சங்கரநாராயணன், அகில இந்திய கார்டு கவுன்சில் செயலாளர் கார்த்திக், அகில இந்திய ரெயில் என்ஜின் ஓட்டுனர்கள் சங்க செயலாளர் கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
முன்களப்பணியாளர்கள்
அப்போது, மக்களின் சொத்தான ரெயில்வே துறையை தனியாருக்கு விற்கக்கூடாது. 18 மாதங்களாக கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய ரெயில்வே பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு ஊக்கத்தொகையும், கொரோனா தொற்றால் இறந்த ரெயில்வே பணியாளர்களின் குடும்பங்களுக்கு அறிவித்தபடி ரூ.50 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும். மதுரை அரசரடி ரெயில்வே மைதானத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில், வினோத்பாபு நன்றி கூறினார்.
அதேபோல, எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உதவி பொது செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ரபீக், உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, லாபத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் ரெயில்வே வழித்தடங்களை தனியாருக்கு கொடுக்கக்கூடாது.
தனியாருக்கு விற்பதை
கொரோனா காலகட்டத்தில், மருந்து பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் போக்குவரத்து தங்குதடையின்றி நடநத சரக்கு போக்குவரத்தை தனியாருக்கு கொடுக்க கூடாது. ரெயில்நிலையம், ரெயில் நிலைய வளாகம், ரெயில்வே மைதானங்கள் ஆகியவற்றை ஆர்.எல்.டி.ஏ. மூலம் தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். ஈ.டி.எஸ்.ஓ. என்ற அவசர சட்டத்தின் மூலம் பாதுகாப்புத்துறை பணியாளர்களின் வேலைநிறுத்த உரிமையை பறிக்க கூடாது. இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்டத்தை சேர்ந்த ஏராளமான ரெயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






