அட்டாக் பாண்டிக்கு அவசர விடுப்பு கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு


அட்டாக் பாண்டிக்கு அவசர விடுப்பு கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 9 July 2021 1:18 AM IST (Updated: 9 July 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

அட்டாக் பாண்டிக்கு அவசர விடுப்பு கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை,ஜூலை
மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் மதுரையை சேர்ந்த அட்டாக் பாண்டி உள்ளிட்ட சிலருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தற்போது எனது கணவரின் தாயார் ராமுத்தாய் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர், எனது கணவரை சந்திக்க ஆர்வமாக உள்ளார். எனது கணவருக்கு அவசர விடுப்பு வழங்குமாறு கோரிய மனுவை ஏற்க, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் மறுத்து உத்தரவிட்டுள்ளார். எனவே எனது கணவர், அவரது தாயாரை சந்திப்பதற்கு 10 நாட்கள் அவசர விடுப்பு வழங்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோர், மனுதாரர் கோரிக்கை குறித்து மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story