பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
வாடகைக்கு வீடு விசாரிப்பது போல் நடித்து பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
பேரையூர்,ஜூலை
பேரையூரைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி கருப்பாயி (வயது 55) நேற்று காலை தனது வீட்டின் முன்பு ஆடுகளுக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 30 வயது மதிக்கத்தக்க 2 பேர் கருப்பாயிடம் வீடு வாடகைக்கு விசாரிப்பது போல் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் எதிர்பாராதவிதமாக திடீரென்று கருப்பாயி கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து கருப்பாயி பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை வலைவீசி ேதடி வருகின்றனர்.
Related Tags :
Next Story