ராணுவ வீரரின் பையை திருடியவர் கைது


ராணுவ வீரரின் பையை திருடியவர் கைது
x
தினத்தந்தி 8 July 2021 7:54 PM GMT (Updated: 8 July 2021 7:54 PM GMT)

ராணுவ வீரரின் பையை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, ஜூலை
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் யேசுராஜா (வயது 25), ராணுவவீரர். சம்பவத்தன்று மதுரை வந்த அவர் ஊருக்கு செல்வதற்காக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு பஸ்சுக்காக காத்திருந்த போது அவரது பையை மர்மநபர் யாரோ திருடி சென்று விட்டார். அதில் செல்போன், ஏ.டி.எம்.கார்டு, ராணுவ அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தன. அது குறித்து அவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது திருட்டில் ஈடுபட்டது சிலைமான் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (52) என்ற பழைய குற்றவாளி என்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story