சுமை தூக்கும் தொழிலாளி சாவு
குவாரியில் தவறி விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி சாவு
திருமங்கலம்,ஜூலை
திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகைசாமி (வயது 43). இவர் அங்குள்ள கல் குவாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கல்குவாரியில் இயங்கும் டோசர் வாகனம் மூலம் சக தொழிலாளிகளுடன் கல் குவாரிக்கு உள்ளே சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் பழுதடைந்து அதில் சென்ற கார்த்திகை சாமி குவாரியில் உள்ள 25 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கூடகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story