நெல் கொள்முதல் நிலையங்களில் சப்-கலெக்டர் ஆய்வு


நெல் கொள்முதல் நிலையங்களில்  சப்-கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 July 2021 8:13 PM GMT (Updated: 8 July 2021 8:13 PM GMT)

வத்திராயிருப்பு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சப்-கலெக்டா் பிரித்திவிராஜ் ஆய்வு செய்தார்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சப்-கலெக்டா் பிரித்திவிராஜ் ஆய்வு  செய்தார். 
நெல் சாகுபடி 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இங்கு தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். 
இந்தநிைலயில் அரசு நிர்ணயித்த அளவை விட குறைவான அளவில் கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதனால் விவசாயிகள் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுவதாகவும்  விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. 
சப்-கலெக்டர் ஆய்வு 
அதன் எதிரொலியாக சிவகாசி சப்-கலெக்டர் பிரித்திவிராஜ் நேற்று வத்திராயிருப்பு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். 
வத்திராயிருப்பு, ராமசாமிபுரம், கன்சாபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கூடுதலாக நெல் கொள்முதல் எந்திரத்தை வழங்கி அறுவடை செய்யப்பட்ட நெல்லை காலதாமதமின்றி ஒரு நாளைக்கு  1,600 மூடைகள் வரை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டார். 
இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். 


Next Story