அரசு பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு
அலங்காநல்லூர் அருகே பெண் அதிகாரியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அலங்காநல்லூர்,ஜூலை
அலங்காநல்லூர் அருகே கல்லணையில் வசித்து வருபவர் ரஞ்சித். இவரது மனைவி ஜெயப்பிரியா (வயது 29). வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் பணி முடிந்து அலுவலகத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
எல்லப்பட்டி அருகே வந்தபோது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென ஜெயப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசு அதிகாரியிடமே கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story