அனுமதியின்றி இயங்கிய முதியோர் காப்பகம் மூடல்


அனுமதியின்றி இயங்கிய முதியோர் காப்பகம் மூடல்
x
தினத்தந்தி 10 July 2021 1:29 AM IST (Updated: 10 July 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி இயங்கிய முதியோர் காப்பகம் மூடப்பட்டது.

உசிலம்பட்டி,ஜூலை.
கலெக்டர் அனிஷ் சேகர் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் காப்பகங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் உரிய அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் மூடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வின்போது, உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரில் அரசு அனுமதியின்றி முதியோர் காப்பகம் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருவாய் துறையினர் மற்றும் சமூக நலத்துறையை சேர்ந்த விரிவாக்க அலுவலர் தேன்மொழி, ஊர் நல அலுவலர் கமலவேணி, கிராம நிர்வாக அலுவலர் முத்துமணி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர்.
இதில் 5 வருடங்களாக அந்த காப்பகம் அனுமதியின்றி செயல்பட்டு வந்துள்ளது. அந்த காப்பகத்தில் இருந்தவர்களை அதிகாரிகள் மீட்டு அங்குள்ள மற்றொரு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் இது குறித்து காப்பக உரிமையாளர் தமிழ்செல்வியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story