தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்; வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைக்கப்படிருந்த ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
பாலங்கள் அமைக்கும் பணி
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் காற்றாலைக்கு தேவையான இறக்கைகளை தயாரிக்க தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்ய உள்ளனர்.எனவே, வெங்கல் அருகே இந்த தனியார் நிறுவனத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்திலுள்ள காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள வண்டலூர்-மீஞ்சூர் நெடுஞ்சாலைக்கு வாகனங்கள் தங்கு தடையின்றி வந்து செல்லும் வகையில் ஆங்காங்கே சாலைகளில் சிறு பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெங்கல் பஜார் வீதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டி இருந்த கடைகள் மற்றும் வீடுகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் நெடுஞ்சாலை துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்.
கடைகளை அகற்றினர்
இந்நிலையில், நேற்று பாகல்மேடு பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த வீடுகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து தள்ளினர். மேலும், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பூ, பழம் விற்றுக் கொண்டிருந்த சாலையோர வியாபாரிகளின் சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். மேலும், இப்பகுதியில் 14 மீட்டர் அகலம் கொண்ட சாலை அமைக்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர். இதனால் இப்பகுதியில் நேற்று பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் தாசில்தார் செந்தில் தலைமையில் வருவாய் ஆய்வாளர் நரசிம்மன் மற்றும் வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜ்கமல்
தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மேலும், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அசோக் தலைமையில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Related Tags :
Next Story