மக்கள் நீதி மய்யம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்


மக்கள் நீதி மய்யம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2021 12:26 AM IST (Updated: 11 July 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மதுரை
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயா்வைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மதுரை ஆரப்பாளையம் குறுக்குச் சாலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதனமுறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதில் மக்கள் நீதி மய்யம் மாநிலச் செயலாளர்(மதுரை மண்டலம்) அழகா், இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் பரணிராஜன், மாவட்டச் செயலாளர்கள் மணி, முனியசாமி, கதிரேசன், ராம்குமாா், இளைஞரணி மாவட்டச் செயலாளர் பிரசன்னகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயா்வால், அரிசி போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது.  இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே எரிபொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், அவற்றின் மீதான வரியைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.4 விலை குறைக்கப்படும், கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரையில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க தயாராக உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினா் தெரிவித்தனா்.
முன்னதாக, கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆரப்பாளையம் பகுதியில் ஊா்வலாக வந்தனா். இறுதி ஊா்வலத்தில் நடத்தப்படும் அனைத்து சம்பிரதாயங்களுடன் நடந்த இந்த நிகழ்வை பொதுமக்கள் வியந்து பாா்த்தனா். 
மேலும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மண் அடுப்புகளை கையில் எடுத்துவந்து தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தனா்.

Next Story