காப்பகத்தில் குழந்தைகள் ஒப்படைப்பு


காப்பகத்தில் குழந்தைகள் ஒப்படைப்பு
x

காப்பகத்தில் குழந்தைகள் ஒப்படைப்பு

மதுரை
மதுரை இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் தங்கியிருந்த 2 குழந்தைகள் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய காப்பக நிறுவனர் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த காப்பகத்தில் தங்கி இருந்து முதியோர்கள் வேறு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதுபோல், அங்கிருந்த குழந்தைகளும் பெற்றோரின் அரவணைப்பில் இருந்தனர்.
இந்த நிலையில் பெற்றோரின் கண்காணிப்பில் இருந்த 5 வயதிற்குட்பட்ட 2 குழந்தைகள் தற்காலிக பராமரிப்புக்காக சிறப்புப் தத்துவள மையத்திலும், 8 வயது சிறுமி ஒருவர் கல்வி, பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக குழந்தைகள் காப்பகத்திலும்  ஒப்படைக்கப்பட்டனர். குழந்தைகள் நலக்குழு தலைவர் விஜய சரவணன், உறுப்பினர்கள் பாண்டியராஜா, சண்முகம் ஆகியோர் இதற்கான பணிகளை செய்தனர்.

Next Story