தடுப்பூசிக்காக வந்து ஏமாறும் மக்கள்
தடுப்பூசிக்காக வந்து ஏமாறும் மக்கள்
மதுரை
மதுரை அரசு மருத்துவமனை சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் மாநகராட்சி இளங்கோ பள்ளியில் நடத்தபடும். ஆனால் தற்போது ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என அந்த பள்ளி முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுதெரியாமல் பலர் தினமும் இங்கு தடுப்பூசி போட வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. எனவே தினமும் தடுப்பூசி இருப்பு குறித்தும், அதை எங்கெங்கு செலுத்தலாம் என்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் உரியமுறையில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story