மாட்டுவண்டி பந்தய ஒத்திகை நடத்தியவர்கள் மீது வழக்கு


மாட்டுவண்டி பந்தய ஒத்திகை நடத்தியவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 July 2021 11:07 PM IST (Updated: 11 July 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

மாட்டுவண்டி பந்தய ஒத்திகை நடத்தியவர்கள் மீது வழக்கு

மேலூர்
மேலூர் போலீஸ் சரகத்தில் உள்ளது கொட்டகுடி. இங்கு சிலர் ஒன்று அவர்கள் வளர்க்கும் மாடுகளை மாட்டு வண்டி பந்தயத்தில் பங்கேற்கும் வகையில் முன்கூட்டியே பயிற்சி அளித்துள்ளனர். அதற்காக கொட்டகுடியில் இருந்து மேலூர்-திருவாதவூர் ரோட்டில் உள்ள கொட்டகுடிவிலக்கு வரை நடைபெற்ற இந்த பயிற்சியில் பல பந்தய வண்டிகள் பங்கேற்றுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்திய மேலூர் போலீசார் கொரானா தொற்று ஊரடங்கு தடையை மீறியதாக கொட்டகுடியை சேர்ந்த சீமான்(வயது 42), மதயானை (27) மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story