மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
ஸ்டேன் சுவாமிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
மதுரை
பழங்குடியின மக்கள் விடுதலைக்காக போராடி கைது செய்யப்பட்டு சிறையிலேயே இறந்த ஸ்டேன் சுவாமிக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழர் தேசிய கழகம், தாய்நாடு மக்கள் கட்சி, தமிழர் கூட்டமைப்பு, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதுபோல், ஸ்டேன் சுவாமிக்கு மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்திலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story