விடுமுறை நாளை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது, உற்சவர் வள்ளி, தேய்வானை உடனுறை முருகப்பெருமான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் தரிசனம் தந்தனர்.
Related Tags :
Next Story