லாரி டிரைவர் உள்பட 3 பேரை கத்தியால் குத்தி வழிப்பறி


லாரி டிரைவர் உள்பட 3 பேரை  கத்தியால் குத்தி வழிப்பறி
x
தினத்தந்தி 12 July 2021 10:01 PM IST (Updated: 12 July 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே லாரி டிரைவர் உள்பட 3 பேரை கத்தியால் குத்தி வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலூர்,ஜூலை.
மேலூர் அருகே லாரி டிரைவர் உள்பட 3 பேரை கத்தியால் குத்தி வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாரி டிரைவர்
மேலூர் அருகே 4 வழிச்சாலையில் உள்ள தெற்குத் தெரு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை முன்பு இரவில் லாரிகளை நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வெடுப்பது வழக்கம். அவ்வாறு விசாகப்பட்டினத்தில் இருந்து நெல்லைக்கு இரும்பு ராடுகளை லாரியில் ஏற்றி வந்த நாமக்கல் சேத்தமங்கலத்தை சேர்ந்த டிரைவர் ஆனந்த் (வயது 33) இரவில் ஓய்வுக்காக லாரியை அங்கு நிறுத்தியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் லாரி டிரைவர் ஆனந்திடம் செல்போனை பறித்தனர்.
அவர் தடுக்கவே, அவரை கத்தியால் குத்திவிட்டு அந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பினர். பின்னர் அதே வாலிபர்கள் நரசிங்கம்பட்டியில் 4 வழிச்சாலையோரம் உள்ள ஓட்டல் அருகே பாண்டி குமார் (22) மற்றும் செல்வகுமார் (21) ஆகியோரிடம் செல்போன் கேட்டு அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று வழிப்பறி கொள்ளையர்களை துரத்தி பிடிக்க முயன்றனர்.
2 பேர் கைது
தகவலறிந்ததும் மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சாலையோரம் பதுங்கியிருந்த மதுரையை சேர்ந்த அஜித்குமார் (24) மற்றும் இளங்கோ (45) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story