ரூ.1 லட்சம், தங்க காசு, மோட்டார் சைக்கிள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து பணம், தங்க காசுகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை, ஜூலை.
மதுரை மேலஅனுப்பானடி கண்மாய் கரை ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 42). பழைய ஆட்டோக்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருப்புவனத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். திரும்பி வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த 1 லட்சம் ரூபாய், ஒரு கிராம் எடையுள்ள 10 தங்க காசுகள் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story