கத்தி முனையில் பணம் பறித்த 4 பேர் கைது


கத்தி முனையில் பணம் பறித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2021 1:27 AM IST (Updated: 13 July 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

கத்தி முனையில் பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகமலைபுதுக்கோட்டை,ஜூலை
மதுரை நாகமலைபுதுக்கோட்டை சமணர்மலை ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டின் (வயது 38). இவர் மேலக்குயில்குடி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 2 மர்ம நபர்கள் அலெக்ஸ்பாண்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.500 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து அவர் நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
இதேபோன்று நாகமலைபுதுக்கோட்டை கோகிலா நகரைச் சேர்ந்த முனியாண்டி (வயது 42) என்பவர் கீழக்குயில்குடிக்கு சென்று விட்டு வீடு நோக்கி நடந்து சென்றபோது அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.800ஐ பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து முனியாண்டி நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து நாகமலைபுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட நாகமலைபுதுக்கோட்டை பாவலர் எஸ்டேட்டைச் சேர்ந்த பரதன் (வயது 28), நாகராஜ் (வயது 21), எம்.ஜி.ஆர்., நகர் விக்னேஷ் (வயது 28) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

Next Story