கன்றுக்குட்டி திருடிய 2 பேர் கைது
கன்றுக்குட்டி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாடிப்பட்டி,ஜூலை.
வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 60). இவர் தனது வீட்டின் அருகில் மாட்டு தொழுவம் அமைத்து 10 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்து 2 கன்றுக்குட்டிகளை திருடிச் சென்று விட்டனர்.
இது குறித்து பிச்சை வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வாடிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கட்டக்குளம் பிரிவில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் இரண்டு கன்றுக்குட்டிகள் இருந்தன. ஆட்டோவில் வந்த சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்த ஒச்சாத்தேவர் (வயது 51), அழகுபாண்டி (33) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் கன்றுக்குட்டியை திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் பல்வேறு இடங்களில் மாடு, கன்றுகளை திருட்டு வழக்குகளில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு ஆட்டோ, கன்றுக்குட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story