ஆசனூர் அருகே மழையில் நனைந்தபடி தேசிய நெடுஞ்சாலையை கடந்த யானைகள்


ஆசனூர் அருகே மழையில் நனைந்தபடி தேசிய நெடுஞ்சாலையை கடந்த யானைகள்
x
தினத்தந்தி 13 July 2021 2:15 AM IST (Updated: 13 July 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே மழையில் நனைந்தபடி தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து சென்றன.

பவானிசாகர்
ஆசனூர் அருகே மழையில் நனைந்தபடி தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து சென்றன.
ரோட்டை கடந்த யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் பகல் நேரங்களில் உணவு, தண்ணீருக்காக அடிக்கடி கடந்து செல்கின்றன. மேலும் ரோட்டோரம் சுற்றி திரிகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் அருகே மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ரோட்டோரம் குட்டிகளுடன் யானைகள் நின்றிருந்தன. யானைகள் கூட்டமாக மழையில் நனைந்தபடி மெதுவாக சாலையை கடந்து சென்றன.
வனத்துறையினர் எச்சரிக்கை
இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பயந்து சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். சிலர் யானைகள் ரோட்டை கடக்கும் காட்சியை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘யானைகள் பகல் நேரங்களில் சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் மித வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story