மாவட்ட செய்திகள்

அந்தியூர், கோபி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் + "||" + corona vaccine

அந்தியூர், கோபி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்

அந்தியூர், கோபி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்
அந்தியூர், கோபி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
ஈரோடு
அந்தியூர், கோபி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
கோபி
கோபி அருகே வாணிப்புத்தூர், அக்கரைகொடிவேரி, கொண்டையம்பாளையம், கூகலூர், அளுக்குளி, கோட்டுபுள்ளாம்பாளையம், வெள்ளாங்கோயில், பொலவக்காளிபாளையம், அம்மாபாளையம் சந்திராபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த 8 நாட்களுக்கு பிறகு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
இதற்காக பொதுமக்கள் அதிகாலையிலேயே வந்து சமூக இடைவெளிவிட்டு் வரிசையில் நின்றனர். அவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. இதனை கோபி தாசில்தார் தியாகராஜன், கோபி வருவாய் ஆய்வாளர் ரஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் வட்டாரத்தில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் 5 ஊராட்சிகளில் நடைபெற்றது. இங்கு கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு்க்கொண்டனர். இதற்காக அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி அரசு தொடக்கப்பள்ளி, சின்னத்தம்பிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, சங்கராப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, வேம்பத்தி அரசு நடுநிலைப்பள்ளி, அத்தாணி அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 5 இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ்குமார், சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன், டாக்டர் கார்த்தீபன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி முகாம்
மண்டபம் யூனியனில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
2. 275 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ஒன்றியங்களில் 275 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
3. கொரோனா தடுப்பூசி முகாம்
18 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
4. கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
5. கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.