காஞ்சீபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


காஞ்சீபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2021 12:08 PM IST (Updated: 13 July 2021 12:08 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் காய்கறிகள், கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம் கண்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அந்த வகையில் காஞ்சீபுரத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் மாவட்ட தலைவர் அளவூர்நாகராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரசார் சைக்கிள் பேரணி நடத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
1 More update

Next Story