முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுக்க வந்தவர்களிடம் மனுக்களை நேரடியாக வாங்கி, குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுக்க வந்தவர்களிடம் மனுக்களை நேரடியாக வாங்கி, குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தினம்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதி மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மனுக்களை கொடுத்து வருகின்றனர்.
இங்கு அளிக்கப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு அந்த மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதால் இங்கு மனுக்கள் கொடுக்க வருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுக்க வருபவர்களிடம் இருந்து மு.க.ஸ்டாலின் நேற்று நேரடியாக மனுக்களை பெற்றுக்கொள்வதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து நேற்று வழக்கத்தை விட ஏராளமானோர் மனு அளிக்க வந்திருந்தனர்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் முடிவடைந்ததும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்களிடம் மு.க.ஸ்டாலின் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மனு அளித்தவர்களிடம் பிரச்சினை குறித்து கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். இதன்பின்பு, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story