தமிழகத்தில் 2,652 பேருக்கு கொரோனா: 20 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் நேற்று 2,652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 39 ஆயிரத்து 428 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,518 ஆண்கள், 1,134 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 652 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 290 பேரும், ஈரோட்டில் 193 பேரும், சேலத்தில் 170 பேரும், சென்னையில் 165 பேரும், திருப்பூரில் 157 பேரும், தஞ்சாவூரில் 191 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 வயதுக்குட்பட்ட 131 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 361 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் இதுவரை 25 லட்சத்து 21 ஆயிரத்து 438 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 24 பேரும், தனியார் மருத்துவமனையில் 12 பேரும் என 36 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 6 பேரும், தஞ்சாவூர், கன்னியாகுமரியில் தலா 4 பேரும் உள்பட நேற்று மட்டும் 18 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 20 மாவட்டங்களில் ஒரு உயிரிழப்பு கூட இல்லை.
தமிழகத்தில் இதுவரை 33 ஆயிரத்து 454 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
74,250 படுக்கைகள் காலி
தமிழகத்தில் நேற்று 40 ஆயிரத்து 317 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 711 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 222 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 74 ஆயிரத்து 250 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 3,104 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 31 ஆயிரத்து 819 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story