மளிகை கடைக்காரர் பலி
தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி மளிகை கடைக்காரர் பலியானார்.
கொட்டாம்பட்டி,ஜூலை.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்துள்ள காளாப்பூரைச் சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 58). மளிகை கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியில் பாலம் வேலை நடைபெறுவதால் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் நிலை தடுமாறி மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் பத்மநாபன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story