வாகனங்கள் பறிமுதல்


வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 July 2021 12:43 AM IST (Updated: 14 July 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பரங்குன்றம்,ஜூலை
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார்  ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் மண் அள்ளியவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதைத் தொடர்ந்து மண் அள்ள பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Next Story